<< October 2009 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03
04 05 06 07 08 09 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31




Contact Me

If you want to be updated on this weblog Enter your email here:


rss feed

Blogdrive


Wednesday, August 11, 2004
Just a forwarder

Exposing the shameless somersault on the POTA issue by The Hindu editorialist by Sachi Sri Kantha:

Book Review: Rajiv Gandhi Assassination: Ex-Police Chief D.R.Karthikeyan’s Version of Truth by Sachi Sri Kantha

Sangam.org is a pro-eelam web site from USA and The Hindu is an anti-Eelam English daily published from Triplicane, India.


Posted at 05:06 pm by peyarili
Make a comment

dingu dingu link


Posted at 11:57 am by peyarili
Make a comment

feedback in full: vanthiyatheevan's weblog

/It is very evident that peyarili has no great opinion on Tamilians and Indians. He is on his trip to showcase his intellectual capabilities and joblessness./

I wonder about your intellectual capabilities. What did I say bad about Tamilians / Indians? All what I said is about the people who refuse to listen what I am talking about. All what I said was about what IPKF was doing; All you Cashew nuts did not listen what I was talking about; Instead assuming me as an LTTE supporter, and start to blame me for number of things. You said in Sundarajan's feedback about Tamil Cinema and gun culture. When I made fun (or pointed out) that Tamilians know gun culture by Tamil cinema, Arun thought that I was rediculing Tamilians. 

Let alone 23 security personnels; I did NOT rationalize/defend Rajiv Gandhi's killing either, did I? Leave LTTE is right or not aside; I can NOT speak for them. Can you show me a place I spoke on behalf of LTTE?

All what I and some others were talking is whether IPKF behaved well or not in its presence in Ilangkai. IPKF's behavior and atrocities towards common Tamils in ilangkai had NOTHING to do with LTTE, as a man/woman/child without any weapon, who was attacked by IPKF was the very person IPKF supposed to protect. Why on earth, all you guys had and have no ear for this simple truth. You did / do not listen this basic fact, mix the patriotism for sake of defending the IPKF victomizers, and started to 'bestow' number of accusations on the people who pointed this out.

In my past experiences, I fully understand how this topic would end up in the net. That's why in the beginning (in Sundararajan's feedback box), I said that it was pointless in indulging on this topic. However, when Arun dragged me into it, I had to defend.

I certainly sure until you let your patriotic blind fold opened, you won't get my point. And, since I am intellectual enough to undestand this and have a day job, I will not even once again attempt to elaborate.

Go on twist my words, quote me from what I did not quote, accuse me as want with your assumptions, and feel good about yourself. However, the fact stands, even though truth is more than one.


Posted at 04:00 am by peyarili
Comments (1)

Monday, August 09, 2004
to sundar

அன்பின் சுந்தரராஜன்,

மிகவும் தயக்கத்துடன் எழுதுகிறேன்; சில காரணங்கள். ஒன்று இந்த விடயம் மீளமீளவிழுத்தும் பொல்லாப்படுகுழி; அடுத்தது, சோழன்முத்திரை இத்தனை நாட்களைப்போல இப்போதும் எனக்கும் பொறிக்கப்படும்; கடைசியாக, எழுத்தத் தெம்பும் பொழுதும் சுருங்கிப்போன நிலை.

சுந்தரவடிவேலிடம் கேட்ட கேள்விகளுக்குச் சுந்தரவடிவேலும் கூட நீங்கள் சுட்டிய பதிவாளர்களுமே பதில் சொல்லவேண்டும். ஆனால், நீங்கள் அவற்றினை முன்வைத்திருக்கும் த்வனி சற்றே பிசகியிருப்பதாகத் தெரிகின்றது.

சிலவற்றினைப் பார்ப்போம்; சுந்தரவடிவேல் புலிகளைப் பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை; இந்திய இராணுவத்தின் இலங்கைச்செயற்பாடுகள் குறித்தே பேசியிருக்கின்றார். நீங்கள் அதற்கு எதிர்வினை என்று சுட்டிச் சொல்லியதிலே இருப்பதாக எனக்குப் பட்டவை இவை; தவறாக இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்:

1. இந்திரா+எம் ஜி ஆர் ஆகியோருக்கு அப்பால், உங்களுக்கு இலங்கைச்சிக்கல்கள் பற்றி அவ்வளவாகத் தெரியாது (உங்கள் அனைவரைப் போல எனக்கு இந்திய இலங்கை ஒப்பந்தமும், திகதிகளும், புள்ளி விவரங்களும் விரல் நுனியில் தெரியாது.)

2. தமிழ்நாட்டிலே ஈழத்தமிழர் ஆதரவுநிலை மாறியதற்குக் காரணம் இராஜீவ் காந்தி கொலை (ஒத்துக்கொள்கிறேன்; ஆனால், இன்னொரு விதத்திலே என்ன சொல்லவருகின்றீர்களென்றால், "ஏன் இராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்பதிலெல்லாம் எனக்கு(ம் மீதித்தமிழக்மக்களுக்கும்) அக்கறையில்லை")

3. புலிகள் மட்டுமே சித்தாந்தங்களிலே பிறழ்ந்தவர்களைக் கொல்கின்றார்கள் ("ஆனால் சித்தாங்களின் அடிப்படையில் மாறுபாடு கொண்டவர்களை எல்லாம் போட்டுத்தள்ளுவதுதான் புலிகளின் வேலை என்றால் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நீண்ட நெடுங்காலத்துக்கு தீர்வே இல்லை"; புலிகள் சித்தாந்தத்திலே பிறழ்ந்தவர்களைக் கொல்வதுண்டு என்பதிலே எனக்கும் மாற்றுக்கருத்தில்லை; ஆனால், இப்படியான உள்வீட்டுக்கொலைகளையெல்லாம் எல்லா இயக்கங்களும் நடத்தின என்பதிலும் இப்படியான செயற்பாடுகளிலே இந்தியாவின் இராணுவத்தினது ஆசீர்வாதம் அவர்கள் இலங்கையிலே இருக்கும்போது மிகவும் பெரிதாக உள்ளது என்பதையும் நீங்கள் அறியவிடாது, இந்தியாவின் தேசியப்பத்திரிகைகள் தடுத்திருக்கக்கூடுமென்பதையும் நான் அறிவேன்; புலிகள் அமைப்பிலே இருந்த பலரைக் கொன்றதிலே டெலோ, ஈபிஆர் எல் எப், புளட் ஆகியன ஈடுபட்டதிலே, இந்திய இராணுவத்திற்கும் சம்பந்தமிருக்கின்றது என்பதை இப்போதாவது அறிந்து கொண்டால், மகிழ்வேன். இது ஒரு தனி இந்திய இராணுவ அவில்தார், தாசில்தார் செயற்பாடாக நிகழவில்லை; இலங்கையிலிருந்த இந்தியத்தூதரகம் தொடக்கம் இந்திய இராணுவ அதிகாரமுறையூடாக நிகழ்ந்தவை. சுட்டிச்சொல்லப்போனால், ஒரு நிகழ்வு; வவுனியாவிலே இந்திய இராணுவத்தின் ஆசீர்வாதத்தோடு ஈபிஆர் எல் எப் சுட்டுக்கொன்ற புலிகள் அமைப்பாளர்கள்)

4. "இலங்கை வந்து இறங்கிய இந்தியப் படையை, அதன் பொறுப்புகளை, நாம் பிறந்த நாடு இந்தியா என்பதையும் மறந்து புழுதி வாரி தூற்றிக் கொண்டிருக்கிறீர்கள்." (இதுதான் தேசபக்தி என்றால், ஈராக்கிலே அடாவடித்தனம் பண்ணிய அமெரிக்கச் சிப்பாய்களை நான் இனி யார் திட்டச்சொன்னாலும் நெட்டிலே திட்டமாட்டேன்பா ;-))

5. சுந்தரவடிவேல் ஏன் எழுதினார் என்று எனக்குத்தெரியாது. ஆனால், "ஒரு அவில்தாரின், தனி மனித பாலியல் வாழ்வு சார்ந்த விடயத்தை, இந்திய அமைதிப் படையின் கூட்டுப் பொறுப்பில் ஏற்றி," என்று நீங்கள் சொல்வது முழுக்கச் சரியல்ல. புலிகளுக்கு மிகவும் எதிராக ஈழத்தேசிய ஜனநாயகக்கட்சி (முன்னைய சீனகம்யூனிஸ்ட்)க்காரரான தணிகாசலம் எழுதிய பிரம்படி லேன் என்ற கதையை நீங்கள் வாசித்திருந்தீர்களென்றால், மெய்யாகவே கொக்குவில் பிரம்படி ஒழுங்கையிலே இந்திய இராணுவம் பண்ணியகூத்துகள் தெரிந்திருக்கும். தூஈஜ்PKF என்பதற்கு ஏன் இலங்கையிலே இந்தியன் பிள்ளை கொடுக்கும் போர்ஸ் (தூஈஜ்PKF) என்ற பதம் இளவட்டங்களிடையே பாவனையிலே சொல்லப்பட்டதென்பதையும் நீங்கள் கவனிக்கவேண்டும்)

6."வன்முறை விடுத்து அவர்களை சனநாயகப் பாதையில் திரும்பச் செய்ய உமக்கும், உம்மையொத்த எமது சக ஈழ சோதரர்களுக்கும் தெம்பிருக்கிறதா..??" (புலிகள் ஜனநாயகமுறைக்குத் திரும்புவது பற்றி இவ்வளவு கவலையாக இருக்கின்றீர்கள்? இலங்கையிலே அட்டகாசம் புரிந்த அந்த ஓர் அவில்தாரையேனும் இந்திய இராணுவச்சட்டத்தின்கீழே இப்போது அமெரிக்கா தன் அடாவடித்தனப்போர்வீரர்களுக்குப் பண்ணும் விசாரணைபோலப் பண்ண உமக்கும் உம்மையொத்த எமது சக இந்தியத்தேஷாபிமானிகளுக்கும் தெம்பிருக்கின்றதா என்றும் கேட்க விருப்பம் :-(

இல்லையெனில், இதோடு பிறர் வன்முறையை மட்டும் கண்டிக்கும் இரட்டை வேட நிலையை விட்டு விடுங்கள்.

ஒன்றுமட்டும் ஒத்துக்கொள்கிறேன்; காலத்திலே கழிந்துபோனவற்றினை தேவைக்கதிகமாக எடுத்துமீளத் தேய்ப்பதிலே எந்தளவு அர்த்தமின்மையும் காலவிரயமும் வழிந்தோடுகின்றதோ, அதைவிட மிகவும் கெடுதலானது, நிகழ்ந்தவற்றின் வீரியத்தினையும் கெடுதலினையும் புரிந்தோ புரியாமலோ தமக்கேற்றவிதத்திலே பெருக்கியும் தேய்த்தும் கண்டுகொள்வதும்.

ஈழநாட்டுப்பற்றோ இந்தியத்தேசாபிமானமோ கண்மூடித்தனமாக இருக்கக்கூடாதென்பதென் அவா.

என்றென்றும் நட்புடன்,
-/.


Posted at 05:24 pm by peyarili
Comments (1)

Sunday, August 08, 2004
old for ram & co


இறைமையைப் பேணல்
================

உந்தன் இல்லாளை உள்வீட்டில் உதைத்திரு;
உன் வீட்டுப் பூங்காவை தீ வைத்துக் கொளுத்து.

அயலான் மகன் உன் மகளைக் கூடுமுன்,
அவன் மனையாளை இன்றே அவசரத்திற் அழுத்திப் புணர்.

முன்வீட்டான் கண்ணாடிக்கும் சிதறப் பெருங்கல்லெறி
வருங்காலம், அவன் பேரன் உதைபந்தடிக்கலாம் உன்வீட்டில்
என்றெடுத்துரை எல்லோர்க்கு மொரு காரணம்.

சட்டைப்பைச் சலவைக்குறிப்புக் கடதாசியில்
சக்கரவட்டம் கீறி, சத்தியமே வெல்லுமென் றோதி
சாதி பேதமின்றி சகலருக்கும் விநியோகி;
சரித்திரம் படைக்காத சாமான்யருக்கும் உபதேசி.

ஒரு மகாத்மா முழத்துண்டுபின் மறைந்துகொள்;
வன மரங்களின் பின்னிருந்து மாவீரரிற் சரம் தொடு;
அத்தினாபுரியிலே காய்வீசச் சொக்கட்டான் கற்றுக்கொடு;
கடந்தகாலத்திற் கஞ்சிகாய்ச்சி, வரண்ட கலயத்திற் பங்கிட்டுப் பருகு.

இந்தத்தேசத்தில் பொன்னுருக்கி, புழுக்கைவடிவு ஆண்குறி பொருத்திக்
கொண்டவன் நீ மட்டும்தான் என்று விண்ணப்பித்துப் பிடித்துக்கொள்
எண்ணத்திற் சின்முத்திரை.

உன் பெண்டாட்டியை குறி பார்த்துதைத்தல்,
பிறன்வீட்டுப் பெண்டுகளை மறம்விளைந்து படுத்தல்,
முன் மனைக் கண்ணாடிகளை உடைத்தல்,
காலில்லாக்கதைகளைக் காற்றுவெளியிற் பரப்பல்
- இயலாமையில் எண்ணிக்கொள்,
இவை எல்லாமே ஏதோவிதத்திலாகும்
உன் இல்லாத இறைமையைப் இறுக்கிமூடிப் பேணிக் கொள்ளலென.

சப்பாணிகள் தேசத்தில்,
உறுக்கிச் சத்தமிட்டவனே
ஒப்பில்லா வீரன்,
உந்தன் உள் உலகுக்கு.
இரைத்திறைத்து உரைத்துக்கொள்,
உன்னையும் அவ் வொருவனென,
இன்றைக்கும் உள்ளது உனக்கு,
ஒரு சுட்டுவிரலாட்டு சொந்த இறைமையென.

தொங்கும் தங்க ஆண்குறி
என்றும் விறைக்காது.
ஆனால்,
சுண்டெலிவால் சொந்த இறைமை
சொக்கித்து வாழ்ந்தது போ!

'00/05/18


Posted at 10:38 am by peyarili
Comments (2)

இலங்கை அரசின் தமிழகப்பேச்சாளர் தோழர் நரச

இலங்கை அரசின் தமிழகப்பேச்சாளர் தோழர் நரசிம்ம ராம் திருவாய் மொழிந்திருப்பது:
http://www.sundayobserver.lk/2004/08/08/fea31.html

Note: Ram's niece is married to Dayanidhi Maran.

Posted at 09:03 am by peyarili
Comments (1)

Sunday, June 06, 2004
தளையுறாததும் தலைப்புறாததும் X

உட்புறம்,
நீரள்ளி நிறைக்க நிறைக்கவும்
நேர்கோட்டிலே நீந்தாதாம் நிறமீன்.
நளினவால் சுழற்றிக் கோணலாய்
வாழ்கூறு கெட்டழியும் போம் திசை.

வெளிப்புறம்,
கரை அணைக்க அணைக்க,
அரித்தோடும் அலை மணல்.
அள்ளிப்போட்ட கூடை கூடத்
தேயும் துகள்வெள்ளி வெள்ளத்துள்.

போட்டவன் பொழுது போனது தவிர
நோக்கத்துக் காக்கமாய், நீர்ப்புறம்
மச்சத்திசையும் நெடுங்கக்காணோம்;
மணற்சுவரும் நிலைக்கக்காணோம்.

-/.
~6, ஜுன் 2004 ஞாயிறு 11:54 மநிநே


Posted at 09:56 am by peyarili
Comments (11)

Saturday, June 05, 2004
தளையுறாததும் தலைப்புறாததும் IX

ஒவ்வொரு குள்ள வௌவால் மனிதனுக்கு
வழிசொல்லிப்போகிற நவகாலம்
கௌவிக்கொண்ட தென் காலை.
நகராது நிலம். நசிக்கும் பாதம்.

அவி இணையச் சந்தெங்கிருந்தும்
வெப்பேற்றி விரிந்தலையும் வெறி அந்து,
யானை நினைவும் நாகக்கண்ணும்
தேளின் கொடுக்கும் நண்டின் நடையுமென.

கேள்வி கன நுங்குக்குலையாக்கிச்
சீவிச் சீவிக் கொட்டு மென் சிறுதலை.
தோல் அரித்து அரிந்து உரித்துக்
கொடுக்கச் நொடிப்பி கழியத் தின்று
வீசும் திரள்குலைக் கேள்வித்தொடர்.

அலை விந்துவால் வினாக்கெல்லாம்
விடை சொல்லிக் கழியுமென் விநாடி.


Posted at 11:46 am by peyarili
Comments (4)

தனித்தானைப் பாடுதல்

தனித்தானைப் பாடுவீர் நீவீர்;
தனித்தானைப் போற்றுவீர் நீவீர்;
உம்மிற் தனித்தானை அவரும்
அவருட் தனித்தானை நீரும்.

முதுகுள்ளி முகமிலி
உருவுள்ளி பெயரிலி
தார்மீகத் தனித்தானைப் போற்றுதி நீவீர்!
தரணி செய்தி பெருத்தானைப் பாடுதி நீவீர்!

ஆங்கே, யாருட் தனித்தானெனத் தேரா என்னைத் தவிரும்;
செத்த செஞ்சீன முகமிலித்தனித்தானையும் பாடுவேன் யான்; அமெரிக்க
' டைம்' காணா சிலியின் அறியிலித் தனித்தானையும் போற்றுவேன் காண்.
மறையதுட் பெரிதாம் மனிதம்! :-)

~5, ஜுன் 2004 சனி 1:24 மநிநே
(தியனான்மென் சதுக்க நசுக்கலின் நினைவுநாளில்)

Posted at 11:31 am by peyarili
Comments (4)

Thursday, May 20, 2004
..

unrelated:

Posted at 12:15 pm by peyarili
Comments (2)

Next Page